Thursday, April 17, 2008

Cinema Paradiso


உலக சினிமாக்களில் சிறந்த 50 படங்களை பட்டியலிட்டால் நிச்சயம் இத்திரைப்படம் இடம் பிடிக்கும்.திரைப்பட இயக்குனராய் புகழ் அடைந்த நாயகன்,தன் வாழ்ந்த கிராமத்திற்கு திரும்பு செல்கிறான்.வறுமையின் பிடியில் தாயோடு வசித்து வந்த அவனது பால்ய காலத்தில் அவனுக்கு இருந்த ஒரே பொழுது போக்கு அங்கு உள்ள திரைஅரங்கில் படங்கள் பார்ப்பது.திரைஅரங்கில் வேலை பார்க்கும் பெரியவரோடு அவனுக்கு நட்பு தொடங்கி அதுவே பின் அவன் திரைபடங்களை விரும்ப வித்தாய் அமைகிறது. சிறுவனுக்கும்,திரைஅரங்கு ஊழியனுகுமான அந்த உறவு பாசாங்கு இல்லாதது...அவர்கள் இருவரும் வரும் காட்சிகள் கவிதை போன்றவை.அவனுக்கு அவர் எடிட்டிங்,ப்ரோஜெக்டிங் ஆகியவற்றை கற்று தருகிறார்.இடையில் நாயகனுக்கு வளர்த்து இளைஞனாகி ஒரு பெண்ணுடன் காதல் கொள்கிறான்.அவளது தந்தை அவளை வேறு ஊருக்கு அழைத்து செல்வதால் அது சோகத்தில் முடிகின்றது...அவள் வேறு ஒருவனை திருமணம் செய்தைதை பின் கிராமத்திற்கு வரும் பொழுது அறிகிறான்.அவளை அங்கு சந்திக்கிறான்..கடந்த கால நினைவுகளை இருவரும் அசைபோடும் அக்காட்சி உணர்வுபூர்வமானது...நாயகன் திரைஅரங்கு ஊழியர் இறந்த செய்தி கேட்டே தன் கிராமத்திற்கு வருகிறான்..காட்சிகள் பின்னோக்கி விரிய படம் தொடங்குகிறது...இத்திரைப்படம் வாழ்வின் சோகம்,காதல்,வெற்றி,இழப்பு என அனைத்தையும் ஒன்று சேர தருகிறது..

4 comments:

Prem said...

Yes a haunting movie especially for me...
One thing to be mentioned is the exceptional music score by Ennio Morricone for this movie which made this movie unforgettable.

Anonymous said...

Good post.

Anonymous said...

கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் இது. விகடனில் எழுதியதும் நான் பார்த்துவிட்டேன்.

kumaresh said...

A great movie. But, I liked Leone's Once upon a time in america. Watch it if you have enough time.