Wednesday, February 24, 2010

எஸ்.ராவின் "நகுலன் வீட்டில் யாருமில்லை"


நவீன பாணி குறுங்கதைகளின் தொகுப்பு இந்த ஆண்டு வெளிவந்துள்ள எஸ்.ரா வின் "நகுலன் வீட்டில் யாருமில்லை".Fables and parables எனப்படும் குறுங்கதை வடிவங்கள் ஏற்கனவே நமக்கு பரிச்சயமானவையே.முல்லா நீதி கதைகள்,ஜென் கதைகள் அதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு.அவ்வகையில் எஸ்.ரா வின் இந்நூல் தமிழில் மிக முக்கியமான பதிவு.புனைவின் உச்சத்தை தொட்டு செல்லுகின்றன பல கதைகள்.முட்கரண்டிகளும்,மது கிண்ணங்களும்,தீக்குச்சியும்,சிகரெட்டும் உயிர் பெற்று உலவுகின்றன....பேசும் தாவரங்கள்,தவளைகள்,விந்தையான சிறுவர்கள்,நகரும் தீவு என ஒவ்வொரு கதையும் ஒரு மாய உலகினுக்குள் இட்டு செல்கின்றது.இத்தொகுப்பின் கதைகள் யாவும் சிறுவர்களுக்கானது அல்ல.மிகப்பெரிய தத்துவங்களை வெகு சில வரிகளில் உணர்த்தும் கதைகளும் ஏராளம்.

ஸ்பூன் மற்றும் முட்கரண்டியின் காதலை அவைகளின் உரையாடலோடு நகைச்சுவையாய் சொல்லும் கதை "காதல் மேஜை".நகரமயமாக்கல் பறவைகளை காணாமல் போக செய்து விட்டது போலவே தவளைகளையும்...அச்சிறு உயிரினம் குறித்து நாம் நினைத்து கூட பார்ப்பதில்லை.பெருநகரம் ஒன்றில் மிஞ்சும் கடைசி இரு தவளைகள் குறித்த "பெருநகர தவளைகள்",அழிந்துவரும் உயிரினங்கள் குறித்த அபாய எச்சரிக்கையை முன்வைக்கின்றது.குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பிப்பதில் தொடங்கி ஒவ்வொரு காரியத்திற்கு வசதியாய் நாம் அணித்து கொள்ளும் முகமூடிகள் ஏராளம்..இதை உணர்ந்தும் குறுங்கதை "வீட்டிற்குள் ஓடும் ஆறு".




கண்ணீரும் சிரிப்பும் பெருநகர வாழ்க்கையை சிக்கல் இன்றி தொடர அவசியபடுகின்றன என்பதை "கண்ணீர்பூட்டு" கதை உணர்த்துகின்றது.குழந்தையுடன் உரையாடும் மாயவித்தைகாரனின் கதையான "கைமூடி திறந்து", சிறுவர் உலகமானது விசித்திரங்களை விரும்புவதோடு கேள்விகள் நிறைந்ததென்பதை நினைவூட்டுகின்றது.ரயில் பூச்சி மீதேறி தொடங்கும் மீசை முளைத்த சிறுவன் ஒருவனின் சாகச பயணத்தில் அவன் எதிர் கொள்ளும் யாவுமே விசித்திரங்கள்!பேசும் மீன்கள்,மூன்று கண் திருடன்,தும்பிக்கை இல்லா யானைகள் என கற்பனை உலகினுக்குள் முழுதாய் நம்மை இட்டு செல்லும் கதை "எப்படி என்று மட்டும் கேட்காதீர்கள்".

இரு வேறு கதைகளில் வரும் சம்பத்தின் தினகரன் மற்றும் நகுலன் உடனான உரையாடல்கள் வாசித்து கொண்டாடப்பட வேண்டிய புனைவின் உச்சங்கள்!இத்தொகுதியில் வாய் விட்டு சிரிக்க வைத்த கதை "சிறகுள்ள பொறியாளன்".கார்பரேட் வாழ்க்கை தேவதூதனை கூட காதல்,கடன்...என ஆசை கொண்டவனாய் மாற்றி விடும் அவலத்தை நிறைந்த பகடியோடு சொல்லுகின்றது.வாசிப்பு மனிதனை மட்டும் இன்றி தவளையை கூட ஆட்கொண்டு விடும் என்பதை "படிக்க தெரிந்த தவளை" கதை சொல்லுகின்றது."மழையின் எறும்பு" மற்றும் "பகலின் முதுகு" கதைகள் மனிதனின் தேடலுக்கு புத்த பிக்குகளின் தத்துவார்த்த விளக்கங்களை சொல்லுகின்றன.

கொட்டி கிடக்கும் இத்தொகுப்பின் குறுங்கதைகளுள் வெகு சிலவற்றை மட்டுமே பகிர்ந்துள்ளேன்.கதைகளுக்கு சிறகுகள் உண்டு!!தேசங்கள் பல கடந்து தொடர்ந்து உலாவி வரும் பல கதைகள் இப்படியாய் நினைக்க செய்கின்றன.சிறுமி ஒருத்தியை மடியில் வைத்து கொண்டு சில கதைகளை உடனே வாசித்து காட்ட வேண்டும் என தோன்றியது..நவீன வாழ்வின் சிக்கல்கள்,சிறுவர்களின் மாய உலகம்,துறவிகளின் தத்துவார்த்தம்,மிகு காமம்,தொடர்ந்து வரும் நம்பிக்கைகள்.........என இக்குறுங்கதைகள் தொட்டு செல்லாத களங்களே இல்லை எனலாம்!!

வெளியீடு - உயிர்மை
விலை - 80 ரூபாய்

26 comments:

ராம்ஜி_யாஹூ said...

அருமை லேகா.

அதுவும் எஸ் ரா நகுலன் நீங்கள், நல்ல காம்பினசன்
இளையராஜா விஸ்வநாத் கமல்ஹாசன் கூட்டணி போல.

எஸ் ரா, நகுலனின் திருவனந்த புரம் வீட்டு தெரு பற்றி எழுதியது இன்னும் ஞாபகம் உள்ளது.

பகிர்ந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்.

Ashok D said...

ப.ந. :)

Joe said...

//
சிறுமி ஒருத்தியை மடியில் வைத்து கொண்டு சில கதைகளை உடனே வாசித்து காட்ட வேண்டும் என தோன்றியது
//
"This is boring, I'm gonna watch Cartoon Network" என்று கிளம்பிப் போய் விடும்! ;-)

நர்சிம் said...

பகிர்விற்கு நன்றி.

selventhiran said...

நல்லறிமுகம்!

Joe said...

I just placed an order for this book & 2 more thru udumalai.com

அண்ணாமலையான் said...

பகிர்வுக்கு நன்றி

Krishnan said...

Another gem of a review.

Lekha, your blog is heartily recommended at http://chenthil.blogspot.com/.

ராம்ஜி_யாஹூ said...

Even among Tamil bloggers, blogs dedicated to book reviews are very few. Suresh Kannan's blog is one of my regular haunts, but he writes more about movies than books. One of my latest finds is this blogger who reviews contemporary Tamil literature extensively. If you are interested in contemporary Tamil literature, you should subscribe to her RSS feeds.


Thanks Krishnan for that senthil's blog Link.

Krishnan said...

It is my pleasure Ramji.

கார்க்கிபவா said...

படிச்சுடுவோம் :))

லேகா said...

நன்றி ராம்ஜி & கிருஷ்ணன்

செந்திலின் வலைத்தளம் குறித்த அறிமுகத்திற்கு நன்றி.வாசிக்க சுவாரஸ்யமாய் உள்ளது அவரின் அறிமுகங்கள்.

லேகா said...

நன்றி நர்சிம்

நன்றி அசோக்

நன்றி செல்வேந்திரன்

நன்றி அண்ணாமலையான்

நன்றி கார்க்கி,அவசியம் படிங்க!! :-)))

லேகா said...

@Joe

//"This is boring, I'm gonna watch Cartoon Network" என்று கிளம்பிப் போய் விடும்! ;-)////

சீரியல்கள் பார்க்காதவரை நல்லது :-))
எங்க வீட்டு குட்டீஸ்களுக்கு கதை கேட்கும் பழக்கம் உண்டு :-)

anyindian.comமிலும் புத்தகங்கள் வாங்கலாம்.மிக சிறந்த படைப்புகள் நிறைய அங்குண்டு.

நன்றி

ஜெபா said...

வணக்கம்...

உங்கள் வலைப்பதிவின் நிரந்தர வாசகனாக ஆகிவிட்டேன்...

நான் நீண்ட நாட்களாக ஒரு புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்,

" சிப்பியின் வயிற்றில் முத்து " என்ற அந்த நாவல் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு,,,

எஸ்.ரா தனது கட்டுரையில் இந்த புத்தகத்தை பற்றி எழுதியிருந்தார்...!



எங்கே வாங்குவது ... ? நீங்கள் படிச்சிருக்கிங்களா..?



--- ஜெபா

லேகா said...

ஜெபா,

நன்றிகள் பல.

இந்த புத்தகம் குறித்து நான் அறிந்திருக்கவில்லை.

அப்பாவிடமோ,நண்பர்களிடமோ விசாரித்து சொல்கின்றேன்.

இனியாள் said...

நல்ல அறிமுகம் லேகா...

Joe said...

லேகா,
"கிறு கிறு வானம்" பரிந்துரைத்ததற்கு நன்றி.

ரொம்ப நல்லா இருந்துச்சு, என் பையனுக்கு வாசிச்சுக் காட்டினேன், ஐந்து வயது பையன் என்பதால் அவ்வளவாக அவன் ஆர்வம் காட்டவில்லை. அப்புறம் அந்த புத்தகத்தைக் காணவில்லை என்று தேடியபோது "அந்த ஓட்டைப் பல்லு புக்-ஆ?"-ன்னு கேட்டான். கவனிக்கவில்லை என்று நான் நினைத்த போதும், கதையைக் கேட்டு கொஞ்சம் ஞாபகமும் வைத்திருக்கிறான் என்று புரிந்தது.

"நகுலன் வீட்டில் யாருமில்லை" புத்தகத்தில் உள்ள சிறுகதைகளை ரசித்துக் கேட்பானா என்று தெரியவில்லை, அடுத்த வாரம் வாசித்துக் காட்டுவோம்.

KARTHIK said...

// தமிழில் மிக முக்கியமான பதிவு.புனைவின் உச்சத்தை தொட்டு செல்லுகின்றன பல கதைகள்.முட்கரண்டிகளும்,மது கிண்ணங்களும்,தீக்குச்சியும்,சிகரெட்டும் உயிர் பெற்று உலவுகின்றன //

இப்போ கொஞ்சநாளா அவரோட புத்தகம் எதுவும் படிக்கல
நல்ல விமர்சனம் படிக்க தூண்டும் வரிகள்.
படிச்சுட்டு சொல்லுறேன் :-))

லேகா said...

நன்றி இனியாள்

நிச்சயமாக கார்த்திக் - நன்றி

லேகா said...

ஜோ,

கிறுகிறுவானம் குழந்தை மொழியிலேயே எழுதபட்டிருப்பது இன்னும் சிறப்பு.அவர்களாகவே வாசித்தால் மேலும் ஆர்வம் வந்திடலாம்.
உங்கள் பின்னூட்டம் வாசித்ததும் நிறைவாய் உணர்ந்தேன்.

நன்றி.

Joe said...

சின்னவர் இன்னும் அ, ஆ எழுதிப் பார்க்கிற நிலையில் தான் இருக்கார்.

கிறு கிறு வானம் புத்தகத்தில் உள்ள சித்திரங்களுக்கு பென்சில், crayons வைச்சு கலர் அடிச்சு வைச்சிருக்கான். ;-)

"உழவன்" "Uzhavan" said...

தொகுப்பை முழுமையாப் படித்துவிட்டு சொல்லுகிறேன் :-)

லேகா said...

ஜோ,

இங்கே சென்னையில் சிட்டிசென்டர் லாண்ட் மார்க்கில் குழந்தைகைகள் புத்தக பிரிவிற்கு எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்க செல்வேன்..எத்தனை வகையான புத்தகங்கள்..மேலும் ஓவியம் தீட்ட, கார்டூன் பொம்மைகள்,படக்கதைகள் என...வண்ணம் தீட்டி மகிழ்வதும் அந்த வயதிற்குரிய பிரிய செயல்களில் ஒன்று :-))குழந்தைகள் சார்ந்த எல்லாமே அழகு தான்!!

பகிர்தலுக்கு நன்றி

லேகா said...

நன்றி உழவன்,படிச்சுட்டு சொல்லுங்க!!

Joe said...

//
குழந்தைகள் சார்ந்த எல்லாமே அழகு தான்!!
//

நிச்சயமா!

மொதல்ல புதுசா வாங்கின புத்தகத்தில கிறுக்காதன்னு சொன்னேன். அப்புறம் அதுவும் அழகா தான் இருக்குன்னு விட்டுட்டேன். ;-)